செய்திகள்

மத்தியவங்கி ஆளுநர் கோப் குழுவில் சாட்சியமளித்தார்

மத்தியவங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று கோப் குழு முன்னிலையில் சாட்சியமளித்தாரென கோப் குழுவின் தலைவர் டி.குணசேகர தெரிவித்துள்ளார்.

பிணைமுறி தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் மீது குற்றம் சுமத்தப்பட்டு பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் குறித்த தீர்மானம் தொடர்பில் ஆராய கோப் குழுவுக்கு சபாநாயகர் பணித்தார்.

சபாநாயகரின் பணிப்புரைக்கமைய இன்று விசாரணை நடந்து முடிந்தது. அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளித்தார். இறுதியான விசாரணையாகவும் இது அமையும்.

எதிர்வரும் நாட்களில் கோப் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்