செய்திகள்

மத்திய செயற்குழு தீர்மானத்திற்கு சஜித் அணி இணக்கம்

ஐக்கிய தேசிய கட்சியின் நேற்றைய மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் வேட்பாளராகவும் மற்றும் புதிய கூட்டணியின் தலைவராகவும் சஜித் பிரேமதாசவை நியமிக்க மேற்கொண்ட தீர்மானத்தை தாங்கள் வரவேற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவை இருக்கச் செய்யும் யோசனைக்கு இணங்கவில்லையெனவும் இது தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)