செய்திகள்

மத்திய தரைக்கடலில் படகுகள் மூழ்கின: அகதிகள் 400 பேர் பலி என அச்சம்

இத்தாலி நாட்டிற்கு அகதிகளை ஏற்றி கொண்டு சென்ற 4 படகுகள் மத்திய தரைக்கடலின் நடுவழியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான.  இதில் 400க்கும் கூடுதலான அகதிகள் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் எரித்ரீயா ஆகிய நாடுகளில் இருந்து 4 படகுகளில் அகதிகள் புறப்பட்டு இத்தாலி நாட்டிற்கு பயணம் செய்துள்ளனர்.  இந்த படகுகள் மத்திய தரைக்கடல் பகுதி வழியே பயணம் செய்துள்ளன.
எனினும் பயணத்திற்கேற்ற வகையில் படகுகள் இல்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில், படகுகள் விபத்திற்குள்ளாகி இருக்கின்றன.  இதனை எகிப்து நாட்டிற்கான சோமாலியா தூதர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இத்தாலி அதிபர் செர்கியோ மேட்டரெல்லா வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய தரைக்கடல் பகுதியில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது.  நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி இருக்க கூடும் என தெரிகிறது என்று கூறியுள்ளார்.