செய்திகள்

மத்திய மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் தற்காலிகமாக சீல்

மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்ற மோசடிகளைக் கருத்திற்கொண்டு மத்திய மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் தென் மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் தென் மாகாண ஆணையாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்.இதேவேளை மத்திய மாகாணத்திலுள்ள 500 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் மத்திய மாகாண ஆணையாளர் உபுல் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.(15)