செய்திகள்

மத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிப்பு

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் அம் மாகாண சபையின் 19 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மாகாண சபையின் துணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.