செய்திகள்

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான மனு நிராகரிப்பு

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக மூன்று நிபுணர்கள் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் இன்று இந்த மனுவை நிராகரித்துள்ளனர்.