செய்திகள்

மத்திய வங்கி ஆளுனர், படைத்தளபதிகளுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு

மத்திய வங்கி ஆளுனர்   மற்றும்  பாதுகாப்புத் துறைகளின் தளபதிகளுக்கான சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி  செயலகத்தில் இன்று இந்த முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதில்,  இலங்கையின்  முப்படைகள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பது தொடர்பாக கலந்துரையாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இலங்கையின் பாதுகாப்பு இயந்திரம் மற்றும் மத்திய வங்கியுடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பாகவே இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக  மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

n10