செய்திகள்

மத்திய வங்கி ஆளுனர் மீது இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு விசாரணை

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூனா மகேந்திரன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சர்சைக்குறிய பிணை முறி விவகாரம் தொடர்பாகவே இவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆணைக்குழுவுக்கு அழைக்கபட்டு அவரிடம் 6 மணித்தியாளங்கள் விசாணை நடத்தப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவரின் கடவுச்சீட்டு கடந்த 13ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் இடை நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக மத்திய வங்கி ஆளுனர்அர்ஜூனா மகேந்திரன் தொடர்பாக அரசியியலில் பலவாறு கதைக்கப்பட்டு அது குழப்ப நிலையையும் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.