செய்திகள்

மத்துகம பல்லேகொட தோட்டத்தில் தீ : 10 வீடுகள் சேதம்

மத்துகம பல்லேகொட தோட்டத்தில் லயன் தொகுயொன்றில் ஏற்பட்ட தீயினால் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்று பகல் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது களுத்துறை தீயணைப்பு பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை சேத விபரங்கள் மற்றும் தீ ஏற்பட்டமைக்காண காரணங்கள் இது வரை தெரியவரவில்லை.