செய்திகள்

மநகூ தொகுதிகள் குறித்து இறுதி உடன்பாடு இன்று அறிவிப்பு

மக்கள் நலக் கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த இறுதி உடன்பாடு இன்று மாலைக்குள் உறுதி செய்யப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில், வேலுநாச்சியார் சரித்திர நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வைகோ, தேமுதிக – தமாகா- மக்கள் நலக்கூட்டணியின் தொகுதி உடன்பாடு சுமூகமாக நடந்ததாகக் கூறினார். யாருக்கு எந்த தொகுதிகள் என்பது இன்று மாலைக்குள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

N5