செய்திகள்

மந்திரம் செய்வதாக கூறி 22வயது பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய மாந்திரிகரை தேடி பொலிஸார் வலை வீச்சு

தனது கணவனை கள்ளக் காதலியிடமிருந்து பிரிப்பதற்காக மாந்திரிகர் ஒருவரை வீட்டுக்கு அழைத்த 22 வயது பெண்ணொருவர் அந்த மாந்திரிகரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாந்திரிகரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ள அந்த மாந்திரிகர்  அந்த பெண்ணின் கணவரை அவரின் கள்ளக் காதலியிடமிருந்து பிரிப்பதற்காக மந்திரம் செய்ய வேண்டுமென கூறி அந்த பெண்ணை அறையொன்றுக்குள்அழைத்து மந்திரம் செய்யும் சாட்டில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறாக பாலியல் வல்லுறவுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படும் பெண் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மாந்திரிகர் இதற்கு முன்னரும் இது போன்று சில பெண்களிடம் காம சேட்டையில் ஈடுபட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.