செய்திகள்

மனிதர்களின் உணர்வுகளைப் பற்றிய படமே “ரீங்காரம்”

ஹரி இயக்கிய “சேவல்” வெற்றிப் படத்தை தயாரித்த ஜே.ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் “ரீங்காரம்” படம் மனிதர்களின் உணர்வுகளைப் பற்றி பேசும் ஒரு படம் என்கிறார்கள்.

வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தினைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் கதையை விட அதன் திரைக்கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டே படம் தயாரிக்க முன்வந்ததாகக் கூறுகிறார் தயாரிப்பாளர் ஜின்னா.

கதையின் விறுவிறுப்பை குறைக்கக் கூடாது என்று இரண்டு பாடல்களை மட்டுமே இந்தப்படத்தில் உள்ளடக்குகிரார்கள்.

தற்போது படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.