செய்திகள்

மனித உரிமைகள் ஆணையாளர் ஜூனில் இலங்கை வருகின்றார்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் லல் குஸேன் எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகா அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உள்ளக விசாரணையை நடைமுறைப்படுத்துவற்கான பொறிமுறை இன்னும் வகுக்கப்படவில்லை. எவ்வாறாயினும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணைக்கு எதிர்க்கட்சியினரது ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளும் உள்ளடக்கப்படும் என்று கூறினார்.

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படவிருக்கும் நிலையில் ஐ.நா. ஆணையாளரின் வருகை முக்கியத்துவம்வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.