மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் – தொல்.திருமாவளவன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதேவேளை இலங்கை கோரியது போன்று இந்தி அரசு, தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்குமாயின் ஆது தமிழர்களுக்கு எதிரான செயற்பாடாகவே அனைவரினாலும் பார்க்கப்படும்.ஆகவே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பம் இடம்பெற்று 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதற்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனித உரிமைப் பேரவையில் இவ்விடயம் தொடர்பான விவாதம் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக 6 நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு இலங்கை அரசு, இந்திய அரசை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)




