செய்திகள்

மனித உரிமை பணியாளர்கள் வீடுகளின் முன்னாள் நாய்தலைகள்

இலங்கையின் இரு பிரபல மனித உரிமை பணியாளர்களின் வீடுகளுக்கு முன்னாள் துண்டிக்கப்பட்ட நாய்தலைகளை இனந்தெரியாத நபர்கள் வைத்துவிட்டுசென்றுள்ளனர்.ஜனாதிபதி தேர்தல் வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிட்டோ பெர்ணாண்டோ ,பிரசங்க பெர்ணாண்டோ ஆகியோரின் வீடுகளுக்கு முன்னாலேயே இவ்வாறு நாய்தலைகள் எறியப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளது . அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற வகையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக இருவரும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.