செய்திகள்

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் மீட்பு

பொல்கஸ்ஓவிட்ட பகுதியிலிருந்து மனித பாவனைக்கு உதவாத 5,500 லீற்றர் தேங்காய் எண்ணெயை கைப்பற்றியதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்தது.

கம்பஹா பிரதேசத்திலுள்ள தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிலையமொன்றிலிருந்தே மேற்படி எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வதிகாரசபை கூறியது.

இந்த தேங்காய் எண்ணெயின் பெறுமதி 15 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க பகுப்பாய்வு அதிகாரியின் அறிக்கையின் பின்னர், மேற்படி எண்ணெய் உற்பத்தி நிலையத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை மேலும் தெரிவித்தது.