செய்திகள்

மன்னாரில் இயற்கை எரிவாயு: 2020 முதல் பயன்படுத்தலாம் என்கிறார் சம்பிக்க

மன்னாரில் கிடைத்துள்ள இயற்கை எரிவாயு மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றை 2020ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஆரம்பமான மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெற்றோலியத்துறையின் விநியோகம், தரம், விலை ஆகியவற்றில் காணப்படுகின்ற பிரச்சினை குறித்து ஆராய்வதற்கான மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் பெற்றோலிய துறையின் எதிர்காலம் குறித்து மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்தார்.