செய்திகள்

மன்னாரில் சிறுபோகத்திற்கு 13 வகை நெல்லினங்கள் பரிந்துரை:கூட்டத்தில் முடிவு

மன்னாரில் 2016ம் ஆண்டு  சிறுபோகத்திற்கு 13 வகை நெல்லினங்கள் விவசாய திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.
கடும்வரட்சிகாரணமாக நீர்மட்டம் குறைந்துள்ளதால் 2016க்கான சிறுபோக செய்கை வீழ்ச்சிகண்டுள்ளதால் இம்முறை  1500 ஏக்கரிலேயே நெற்செய்கை கூட்டத்தில் மேலும் முடிவு எடுக்கப்பட்டது.
இத தொடர்பாக மன்னார் மாவட்டத்தின் 2016ம் ஆண்டிற்கான  சிறுபோக நெற்பயிர் செய்கை ஆரம்பிப்பதற்காக ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளநிலையில் அது தொடர்பாக விசேட கூட்டம் உயிலங்குளம் வண்ணாமோட்டை விவசாய பயிற்சிநிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை  மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் கே.வசந்தகுமார், நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாஸ், மன்னார் கமலசேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பா.தேவரதன், கமநல காப்பறுதி உதவி பணிப்பாளர் றிஸ்வி, மன்னார் உதவி மாவட்ட செயலாளர் பபாகரன், கட்டுகரை திட்ட முகாமையாளர் ஜேக்கப், நீர்பாசன திணைக்களத்தின் முகாமையாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்டத்தின் மன்னார்,நானாட்டான், மாந்தை மேற்கு ஆகிய மூன்று  பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து விவசாய அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தமது தேவைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் 2016ம் ஆண்டிற்கான சிறுபோகம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தினர்.
சிறுபோகம் செய்கை பண்ணப்படவுள்ள காலத்தில் கால்நடைகள் நெற் பயிர்செய்கையை நசப்படுத்தாத வண்ணம் மேற்கொள்ளபடவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இம்முறை சிறுபோகத்தை நோக்கும்போது கடந்த ஆண்டு சிறுபோகத்தை பார்க்கிலும் இவ்வாண்டு நெற்பயிர் செய்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு 3000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக நெற்பயிர்செய்கை இவ்வாண்டு 1500 ஏக்கராக வீழ்சிகண்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக வறட்சி ஏற்பட்டு நீர் மட்டம் குறைந்துள்ளமை இதற்காண காரணம் என சுட்டிகாட்டப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டு கட்டுகரை குளத்தின் நீர்மட்டம் 10 அடியாக இருந்து இவ்வாண்டு வரட்சி காரணமாக நீர்மட்டம் 8 தொடக்கம் 7 அடியாக குறைவடைந்துள்ளது.
சிறுபோக நெற்பயிர் செய்கையின் விதைப்பு எதிர்வரும் மே மாதம் முதலம் திகதி முதல்  மே மாதம் 21ம் திகதி வரைக்குள்  விதைத்து முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இம்முறை சிறுபோக செய்கைக்கென 13 வகையாக நெல்லினங்கள் செய்கை பண்ண விவசாய திணைக்களம்  பரிந்துரை செய்துள்ளது.
இதற்கமைவாக இரண்டரை (2 ½ ) மாதங்களில்  செய்கை பண்ணக்கூடிய பி;ஜி வெள்ளை நாடு சரசரி விளைச்சல்  ஐந்து (05) டொன்னும்
மூன்று மாதங்கள் செய்கை பண்ணக்கூடிய நெல் இனங்களான பி.ஜி 300 வெள்ளை நாடு சரசரி விளைச்சல் ஏழு (07) டொன், ஏ.ரி 308 வெள்ளை சம்பா சரசரி விளைச்சல் ஆறு (06) டொன், ஏ.ரி 307 வெள்ளை நாடு  சரசரி விளைச்சல் ஏழு (07) டொன்னும்
அதேபோன்று மூன்றரை (3 ½) மாதங்கள் செய்கை பண்ணக்கூடிய நெல்லினங்களான பி.ஜி 325  வெள்ளைநாடு சரசரி விளைச்சல் ஆறு (06) டொன்,  பி.ஜி 360 வெள்ளை சம்பா  சரசரி விளைச்சல்  6.5 டொன், பி.ஜி 358 வெள்ளை சம்பா சரசரி விளைச்சல்  9.5 டொன், ஏ.ரி 354 வெள்ளை நாடு சரசரி விளைச்சல்  ஐந்து டொன் (05),  பி.ஜி 370 வெள்ளை சம்பா சரசரி விளைச்சல்  ஆறு (06) டொன், எல்.டி 356 சிவப்பு சம்பா சரசரி விளைச்சல் 4.5 டொன், எல்.டி 365 சிவப்பு சம்பா சரசரி விளைச்சல் ஆறு (06) டொன், ஏ.ரி 353 சிவப்பு நாடு சரசரி விளைச்சல்  6.5 டொன்,   பி.ஜி 351 சிவப்பு நாடு சரசரி விளைச்சல்  ஐந்து (05) டொன் ஆகியன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. IMG_1543 IMG_1546
n10