செய்திகள்

மன்னாரில் சிறுவர்கள் சீரழிவதை தடுக்ககோரிக்கை

சிறுவர்களை சரியானமுறையில் வழி நடத்தவேண்டிய பெற்றோரின் கவனஈனத்தினால் எதிர்கால இளம் சமூதாயம் சீர்ரழிந்து விடுமோ என்ற நிலை வலுப்படுவதை தடுக்க அணைவரும் ஒன்று சேர்ந்து உழைப்பது அவசியம் என மன்னார் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மன்னாரில் சிறுவன் ஒருவன் கள்ளுக்கடையில் இருந்ததைக்கண்ட குறித்த பகுதிவாழ் சமூக ஆர்வலர்கள், சிறுவனின் நிலை குறித்து கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக மன்னார் – தாழ்வுபாடு வீதியில்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவிற்கு சற்று தொலைவில் அமைந்துள்ள உள்ளக வீதியோன்றிற்கு அருகாமையில் அமைந்துள்ள கள்ளுத்தவரணைக்கு கள்ளு குடிக்க வந்த உறவினர் ஒருவர் கள்ளுத்தவரணைக்கு சிறுவன் ஒருவணை கூட்டிசென்ற சம்பவம் ஒன்று மன்னாரில் பலரையும் கவலையடைய செய்துள்ளது

கடந்த ஞாயிறு(03) குறித்த சம்பவம் மன்னார் டிப்போ அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவிலுள்ள கள்ளுத்தவரணையின் இடம்பெற்றுள்ளது.

சிறுவனை அழைத்து சென்ற உறவினர் ஒருவர் சிறுவனை கள்ளுத்தவரணையில் மோட்டார் சைக்களில் இருத்திவிட்டு கள்ளு குடிக்க சென்றுள்ளார்.

சிறுவனை அழைத்துவந்த உறவினர் கள்ளு குடித்துவிட்டு வரும்வரை சிறுவன் குறித்த மோட்டார் சைக்களில் அமர்ந்து கொண்டு கள்ளு குடிக்கவருபவரின் செயற்பாடுகளை பார்த்தவண்ணம் இருந்துள்ளார்.அதணை அவதானித்த சமூக ஆர்வலர்கள் சிறுவனின் நிலைகுறித்து கவலையடைந்துள்ளனர்.

பெற்றோரின் கவனக்குறைவே அதற்கான காரணம் என தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் தமது குழந்தைகள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்துவதுடன். சிறுவயதிலேயே அவ்வாறான இடங்களுக்கு சிறுவர்களை அழைத்து செல்லதால் சிறுவயதிலேயே இளம்சமூகம் சீரழிந்து செல்லும்; நிலை உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அணைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றனர்.

n10