செய்திகள்

மன்னாரில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதனின் முயற்சியால் மன்னார் மாவட்டத்தில் 700 மெற்றிக் டொன் நெல்லிணை மன்னார் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் விவசாயிகளின் நெல்லிணை கொள்வனவு செய்ய வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனது செய்யும் நடவடிக்கையிணை நெல் சந்தைபடுத்தல் சபை கடந்த 8ம் திகதி முதல் மன்னாரில் நிறுத்தியிருந்தது.
இதனால் மன்னார் விவசாயிகள் நெல்லிணை வழங்குவதில் பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்திருந்தனர். இதணை அடுத்து தமது பிரச்சிணைகள் தொடர்பாக  விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவத்திற்கு கொண்டு
வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் பி.கரிசனை அவரது அமைச்சில் நேரடியாக சென்று சந்தித்து விவாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பாக தெரியப்படுத்தியதுடன் மேலும் நெல்லினை நெல் சந்தைபடுத்தும் சபை கொள்வனது செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தம்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்தார்.
இதணை ஏற்றுகொண்ட உற்பத்தி சந்தைபடுத்தல அமைச்சர் 700 மெற்றிக்டொன் நெல்லிணை கொள்வனவு செய்ய உறுதியழித்தள்ளார். இதணையடுத்து இது விடயமாக சம்பந்தபட்ட நெல் சந்தைபடுத்தல் முகாமையாளருக்கு  மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லிணை கொள்வனது செய்ய பணிப்புரை விடுத்தள்ளார்.
இதன் அடிப்படையில்  சில தினங்களில் மன்னார் மாவட்டத்தில் 700 மெற்றிக் டொன் நெல்லிணை விவசாயிகளிடம் இருந்து கொள்வது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓரிரு தினங்களில் நெல் சந்தைபடுத்தல் சபை மன்னார் மாவட்ட விவசாயிகளிடம்மிருந்து நெல்லிணை கொள்வனது செய்யவுள்ளது.

 n10