செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் வளம் தொடர்பில் விமானம் மூலம் ஆய்வு!

மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் 2000 மில்லியன் பீப்பாய்கள் அளவிலான கனிய எண்ணெய் வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமை கனிய எண்ணெய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பில் புதிய வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விமானத்தின் மூலம் அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இங்குள்ள கனிய எண்ணெய் வளத்தின் மூலம் நாட்டின் கடன் சுமையை குறைக்க முடியுமாக இருக்கும் என்று கருதுவதாக அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
-(3)