செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் விஜயம்

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு நேற்று சனிக்கிழமை காலை விஜயத்தை மேற்கொண்ட புனர்வாழ்வு, புனரமைப்பு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பூசை வழிபாட்டில் ஈடுபட்டதோடு, ஆலயத்தின் குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

நேற்று காலை 9 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சர் முதலில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ஆலயத்தை சுற்றிப்பார்த்த அமைச்சர், இந்த ஆலயத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த விக்கிரகங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபை ஏற்பாடு செய்த ஆன்மீகப் பெருவிழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனும் கலந்து கொண்டதுடன் சொற்பொழிவுகளும் இடம்பெற்றதோடு, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.