செய்திகள்

மன்னார் நீதிமன்றத்தால் கடந்த 2 மாதங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை

கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு மன்னார் கடற்தொழில் திணைக்களம் மற்றும் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 44 பேரும் இன்று புதன் கிழமை (06) மன்னார் நீதிமன்றில் விடுதலை செய்யப்பட்டனர்.

மன்னார் கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறி இந்திய இலுவைப்படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து; கடந்த பெப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 44 இந்திய மீனவர்கள் வௌ;வேறு

 தினங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடமும் மன்னார் பொலிசாரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டு  சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

21 இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தனித்தனியாக மூன்று வழக்குகளையும் 06 சிறுவர்கள் உட்பட 23 இந்திய மீனவர்களுக்கு எதிராக மன்னார் பொலிசார் ஒரு வழக்கையும் தாக்கல் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களை கடந்த 04.04.2016 திங்கள் கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் மீண்டும் ஆஐர்படுத்தியபோது இவர்களை எதிர்வரும் 18ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவுட்ட நிலையிலேயே இவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமையவே சிறுவர்கள் உட்பட 44 இந்திய மீனவர்களையும் இன்று புதன் கிழமை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் மன்னார் பொலிசாரும் மன்னார் சிறுவர் பராமரிப்பு அதிகாரிகளும் மன்னார் பதில் நீதவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஐர்படுத்தியபோது இவர்கள் மீன்பிடிக்காக பாவித்த படகுகளையும் அதன் உபகரணங்களையும் தடுத்து வைத்த நிலையில் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 44 இந்திய மீனவர்களையும் இலங்கைக்கான யாழ் இந்திய துணை தூதரக அதிகாரி வீ.ஸ்ரீரிதர் மன்றில் பொறுப்பேற்றதுடன் இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கடல் மார்க்கமாக அழைத்துச் செல்ல இருப்பதாகவும் பின் இவர்கள் இந்திய கடல் எல்லை பாதுகாப்பு இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களின் நாட்டுக்கு அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.

 n10

DSCN2649 DSCN2650 DSCN2652