செய்திகள்

மன்னார் பெரியமடு தெளிவாறு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு-நேரடியாக சென்று பார்வையிட்டார் சாள்ஸ்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு மற்றும்  ஈச்சளவக்கை பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு   பெரியமடு தெளிவாறு பகுதியில் மேட்டு நில செய்கைக்கான காணிகள் உள்ளது.யுத்தத்திற்கு முன்பு அப்பகுதியில் மேட்டு நில  பயிர்ச்செய்யை அந்த மக்களால் மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்ததை நிவர்த்தி செய்து வந்தனர்.

 யுத்தத்தின் பின்னர் அப்பகுதியில் மிதிவெடிகளின் அச்சுறுத்தல்களால் இன்று வரை மக்கள் மேட்டு நில செய்கையில் ஈடு படாமல் இருந்துவருகின்றனர். இதனால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் Nதுசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.

தற்பொழுது அப்பகுதியில் சிலர் இன்று வரை அம்மக்களுக்குரிய நிலங்களில் மணல் அகழ்வினை மேற்கொண்டு வருவதாகவும் பாதீக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக புதன் கிழமை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.

 இதன் போது அங்கு மக்களுடைய காணிகளில் சுமார் 6 அடிக்கு மேல் தோண்டப்பட்டு மண் அகழ்வு செய்யப்பட்டுள்ளது.இதனால் பாரிய பள்ளம் அப்பகுதிகளில் காணப்படுகின்றது.

குறித்த விடையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்ட உரையாடினார்.இதன் போது  அவர் அப்பகுதியிலுள்ள எம்.எஸ்.சாகுல் அமீது அவர்களுக்கும், நசார் அவர்களுக்கும் 2015ஃ6ஃ24ம் திகதி தலா 150 கியுப் ஆற்றுப்படுக்கையில்; உள்ள மணலை அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

ஆனால் மக்கள் குடியிருப்பு நிலங்களிலுள்ள மணலை அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் அரச அதிகாரிகளின் ஆதரவுடனே இன்று வரை சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெற்று வருவதாக பாதீக்கப்பட்ட குறித்த காணிக்கு உரித்தானவர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிலங்கள யாவும் மேட்டு நில பயிர்ச் செய்கை அற்ற தன்மை கொண்டதாகவும் தற்போது காணப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளதோடு, சட்ட விரோத மண் அகழ்வினை மேற்கொண்டு வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுத்து இதற்கான மாற்று வழிகளை பெற்றுத்தருமாறும் அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.