செய்திகள்

மன்னார் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்ய மறுக்கும் நெல் சந்தைபடுத்தும் சபை

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவிட்டான் பகுதியில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலையில் விவசாயிகளால் கொண்டு செல்லப்பட்ட நெல்லிணை வாங்க நெல் சந்தைபடுத்தும் சபை நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக  பாதிக்கப்பட்ட விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தலா ஒரு விவசாயிக்கு 2000 கிலோ நெல்லிணை கொள்னவது செய்ய நெல் சந்தைபடுத்தும் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் , சம்பா 41 ரூபாவிற்கும் ஏணைய நெல்கள் 38 ரூபாய்க்கு கொள்னவது செய்யப்படுகிறது. இதன் படி விவசாயிகள் நெல் மூடைகளை நெல் சந்தைபடுத்தும் சபைக்கு வழங்கிவந்தனர்.

இந்நிலையில் நெல்லிணை வழங்குவதற்காக நெல் மூடைகளை கடந்த புதன்கிழமை சில விவசாயிகள் கொண்டு சென்றுள்ளனர். இந் நிலையில் குறித்த நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவிட்டான் நெற்களஞ்சியசாலையில்  நெல் சந்தைபடுத்தும் சபை நிர்வாகம் குறித்த நெற் களஞ்சியசாலையில் விவசாயிகளின் நெல் மூடைகளை கொள்வனது செய்ய  மறுப்பு தெரிவித்ததாக விசயாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக களஞ்சியசாலையில் நெல் மூடைகள் நிரப்பபட்டுள்ளதால் குறித்த விவசாயிகளின் நெல்லிணை கொள்வனது செய்ய முடியாது என்றும் எனவே களஞ்சியசாலையில் உள்ள நெல்லிணை வெளியேற்றிய பின்பே நெல்லிணை கொள்வனது செய்ய முடியும் என தெரிவித்துள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் கடந்த புதன்கிழமை  இவ் நெற் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட  நெல் மூடைகள் களஞ்சியசாலயின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதால் மழையில் நணைந்து நெல் பழுதடையும் நிலை தோன்றியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நெல் மூடைகள் கடந்த ஒருவாரமாக களங்சிய வளாகத்தில் இருந்து வருவதாக விசனம் தெரிவிக்கும் விவசாயிகள் நெல் மூடைகளை கொள்வனது செய்யவோ அல்லது  களஞ்சியசாலையில் நெல் மூடைகளை வைக்க இடம் இல்லாவிட்டாலும் வேறு களஞ்சிய சாலையில் கூட அதணை பாதுகாப்பாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட நிர்வாகங்கள் தவறியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை விவசாயிகளின் நெல்லிணை கொள்வனவு செய்வதற்காக விண்ணப்ப பத்திரத்தையும் விவசாயிகளுக்கு வளங்க நானாட்டான் நிவர்வாகம் மறுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த விடயங்களில் பொறுப்பு மிக்க அதிகாரிகள் தலையிட்டு விவசாயிகள் பாதீக்கப்படாதவாறு நெல்லினை கொள்வனவு செய்ய உரிய நடவடிக்கையினை உடனே எடுக்கும்படி வேண்டுகோள் விடுக்கின்றனர்

மூடை 50 கிலோ , ஒருவருக்கு 2000 கிலோ , கீரி சம்பா கிலோ 50 ரூபா, சம்பா 41 ரூபா ஏணைய நெல்கள் 38 ரூபாய்க்கு கொள்னவது செய்யப்படுகிறது.