செய்திகள்

மன்னிப்புக் கோரி நயன் – விக்னேஷ் திருப்பதி கோவிலுக்கு கடிதம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாராவும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் நேற்று மதியம் தரிசனம் செய்துவிட்டு, கோவிலின் நான்கு மாட வீதியில் காலணி அணிந்து போட்டோஷூட் செய்தததற்காக மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி ஏழுமையான் கோவிலில் நயன்தாராவும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தனர்.

அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இருவரும் கலந்துகொண்டனர். பின்னர் கோவிலுக்கு வெளியே ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால், அங்கிருந்து சென்றுவிட்ட இருவரும் சிறிதுநேரத்தில் அதே பகுதிக்கு வந்து போட்டோஷூட் நடத்தினர். அப்போது இருவரும் காலணிகள் அணிந்துகொண்டனர்.

இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. திருமலையில் போட்டோ ஷூட் செய்வதோ, நான்கு மாட வீதியில் காலணிகள் அணிவதோ கூடாது என்பது ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதியாகும்.

இந்த நிலையில், திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் எழுதியுள்ள கடிதத்தில், ”காலணியுடன் நாங்கள் நடமாடியதைக் கவனிக்கத் தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன். போட்டோஷூட் எடுத்தபோது காலணி அணிந்திருந்ததை உணரவில்லை, என்று விக்னேஷ் தெரிவித்திருந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-(3)