Search
Sunday 25 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Home Forums

    • Forum
    • Topics
    • Posts
    • Freshness
    • Users FAQ
      Frequently Asked Questions about the website.
    • 0
    • 0
    • No Topics

    • குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

      முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சரின் வழிநடத்தலின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் கருணாரத்தினம் ஜெசிந்தன் தலைமையில் சென்ற பொலிஸ் அணியினர் நேற்று சனிக்கிழமை   இரு வேறு இடங்களில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தடயப்பொருட்களும் மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

      இது தொடர்பில் மேலும் தெரிய வருவது நேற்று சனிக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் பேராறு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 15,750 ml கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
      அன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு பேராறு பகுதியிலிருந்து அனுமதிப் பத்திரத்திற்கு முரணான முறையில் உழவு இயந்திரத்தில் மணலை ஏற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி இரு சம்பவங்களிலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு நபர்களும் சான்றுப் பொருட்களும் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்காக புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 0
    • 0
    • No Topics