செய்திகள்

மயூரனின் கண்களில் மரணபயம் தெரிகின்றது: பாலி சிறையில் அவரை சந்தித்த உறவினர்

_80552160_balipainting

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் இந்தோனேசியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள மயூரன் சுகுமாரனின் நெருங்கிய உறறவினர் ஒருவர் தாங்கள் அவரை மீண்டும் உயிருடன் பார்ப்போம் என நம்பிக்கை கொண்டுள்ளதாக பிபிசியின் அத்தார் அஹமட்டிற்கு தெரிவித்துள்ளார்.

அதன் தமிழ் வடிவம்:

லண்டனை சேர்ந்த நிரஞ்சலா கருணாதிலக சில நாட்களுக்கு முன்னர் தான்  பாலி சிறையில்மயூரனை  சந்தித்துள்ளார்.  பாலி 9 என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் என கருதப்படும் மயூரனிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் அனைவரும் அவர் உயிருடன் இருக்கவேண்டும் என கருதுகின்றோம், அவர் ஆயுள் முழுக்க சிறையிலிருந்தாலும் சரி என நிரஞ்சலா தெரிவித்தார்.  2005 ம் ஆண்டு மயூரனும்,அன்றூ சான் என்ற அவுஸ்திரேலிய நபரும் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு போதைப்பொருட்களை கடத்த முயன்ற வேளை கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை நீக்குமாறு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகள் விடுத்த வேண்டுகோளை இந்தோனேசியா நிராகரித்துள்ளதுடன் துப்பாக்கி பிரயோகத்தின் மூலமாக அவர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக பாலி சிறைச்சாலைக்கு அவர்களை மாற்றியுள்ளது.
என்னை நினைத்து எனது குடும்பத்தினர் வருந்தக்கூடாது என அவர் குறிப்பிட்டார் என தெரிவிக்கும் நிரஞ்சலா, நாங்கள் அழுவதை பார்க்க அவர் விரும்பவில்லை. தனது மரணதண்டனை குறித்து நகைச்சுவையாக கூட அவர் பேசுகின்றார்.  எனினும் அவர் அது குறித்து வருந்துவது , கவலைப்படுவது அவரது கண்ணில் தெரிகின்றது என நிரஞ்சலா தெரிவித்துள்ளார்.

லண்டனில் பிறந்த பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற மயூரன் சிறையில் இருந்த வேளை புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்டுள்ளார். பட்டப்படிப்பை கூட முடித்துள்ளார் என்கின்றனர்.  அவர் செய்த குற்றத்தி;ற்காக அவரை தண்டிக்கவேண்டாம் என நாங்கள் எவரும் தெரிவிக்கவில்லை, ஆனால் மரணதண்டனை இதற்கு தீர்வல்ல என்றே தெரிவிக்கிறோம்.  மரண தண்டனை இத்தகைய குற்றங்களை தடுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை, வேறு பல வழிகள் உள்ளன என்றும் அவர்தெரிவித்தார்.  குறிப்பிட்ட மரணதண்டனைக்கு சர்வதேச ரீதியில் கடும் கண்டணம் எழுந்துள்ளதுடன் அவுஸ்திரேலியா இந்தோனேசியா உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

_80552154_balisplitimage

வேர்ஜின் குழுமத்தின் ஸ்தாபகர் ரிச்சர்ட் பிரன்சன் உட்பட பெருமளவானவாகள் மரணதண்டையை இரத்துச்செய்யுமாறு இந்தோனேசிய அரசாங்கத்திற்கு வேண்டுகொள் விடுத்துள்ளனர்.  உலகின் பல பகுதிகளிலிருந்து எங்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு நினைத்துப்பார்க்க முடியாதது,அவுஸ்திரேலியாவில் மக்கள் மெழுகுவர்த்தி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.எங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இது எங்களை நெகிழச்செய்துள்ள து என நிரஞ்சலா தெரிவித்தார்.

இந்தோனேசியா கடந்த காலங்களில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் தொடர்பாக கடுமையா நிலைப்பாட்டை பின்பற்றி வருவதுடன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைகளை இரத்துச்செய்ய மறுத்து வருகின்றது.அந்த நாட்டின் ஜனாதிபதிஜோகோ விடோடோ இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் குறித்து தான் இரக்கம் காட்டப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.  எனினும் எதிர்வரும் நாட்களில் அவுஸ்திரேலிய இந்தோனேசிய அதிகாரிகள் மத்தியில் இது தொடர்பான இணக்கப்பாடு ஏற்படும் என நிரஞ்சலா தெரிவித்துள்ளார்.