செய்திகள்

மயூரன், சானின் உடல்கள் ஜகார்த்தா கொண்டுவரப்பட்டன

போதைப்பொருள் கடத்தியதற்காக இந்தோனேசியாவில் நேற்று மரண தண்டனை வழங்கப்பட்ட மயூரன் உட்பட எட்டு பேரும் அவர்கள் சுடப்படும்போது அவர்களது கண்கள் கட்டப்படுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்ததுடன் குறுக்கு கம்பத்துடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தனர்.

எட்டு சிறைக் கைதிகளும் 4 மீற்றர் இடைவெளியில் கட்டப்பட்டிருந்தனர். மயூரனுக்கு அருகில் அன்ரூ சான் கட்டப்பட்டிருந்தார். இவர்கள் சுடப்பட்டபோது கடவுளை புகழும் ஒரு பாடலை இவர்களா அனைவரும் பாடினர். மயூரனும் சானுமே இந்தபாடலை உரத்த தொனியில் சிறப்பாக பாடிக்கொண்டிருந்ததாக இந்த மரண தண்டனையை நேரில் பார்த்த ஐரிஷ் போதகரான சார்லி பிரவுஸ் தெரிவித்தார்.

இதேவேளை, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்தில் இருந்து 10 மணி நேர பயணத்தின் பின்னர் மயூரன் மற்றும் சானின் உடல்கள் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து சிட்னிக்கு இவர்களது உடல்கள் அனுப்பப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

1 2 3