செய்திகள்

மயூரன், சான் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

 

இந்தோனேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாரன் (34 வயது ) மற்றும் அன்ரூ சான் ( 31 வயது) ஆகியோருக்கு இன்று நள்ளிரவுக்கு பின்னர் சரியாக 12.25 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நுசாஹம்பங்கன் தீவின் காடு ஒன்றுக்குள் வைத்து இவர்களுக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களுடன் வேறு 6 சிறைக் கைதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கான இந்த தண்டனையை துப்பாக்கி தரித்த 12 பொலிசார் நிறைவேற்றினர்.

இவர்களுக்கான இந்த மரண தண்டனை எந்த இடையூறுகளும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தனது கண்கள் கட்டப்படாமலேயே தனது மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று மயூரன் கேட்டிருந்தார். மரணத்தை கண்டு தான் அஞ்சவில்லை என்ற செய்தியை தனது தயாருக்கு வழங்குவதற்காக ‘ மன வலிமையுடனும் இறைமையுடனும்’ தனது சாவை எதிர்கொள்ள விரும்புவதாக அவர் கூறியிருந்தார். இவர்களுக்கான இறுதியாக KFC இல் இருந்து உணவு வழங்கப்பட்டிருந்தது.

இதேவளை, பிலிப்பைன்ஸை சேர்ந்த மேரி ஜேன் வேலோசோ என்பவரின் மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இன்று இந்தோனேசியாவின் சட்ட மா அதிபருக்கு அனுப்பிய அவரச கடிதத்தில் இவரது மரண தண்டனையை ஒத்திவைக்குமாறு கோரி  இருந்ததை அடுத்தே தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலோசோவை தவறுதலாக போதைப்பொருள் கடத்துவதற்கு தானே அனுப்பி வைத்ததாக மரியா கிறிஸ்ரினா சேர்ஜியோ என்ற பெண் பிலிப்பைன்ஸ் பொலிஸில் ஒத்துக்கொண்டதாகவின் இதன்காரணமாக வேலோசோவுக்கான தண்டனையை ஒத்திவைக்குமாறும் இந்த கடிதத்தில் பிலிப்பைன்ஸ் அரசு கேட்டிருந்தது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=CQTUaZUR0GM” width=”500″ height=”300″]

1 2

2 3 4 5 6