செய்திகள்

மயூரன் சுகுமாரனிற்கு சில மணிநேரங்களில் தண்டனை நிறைவேற்றம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மயூரன் சுகுமாரனிற்கும், அவரது சகாக்களிற்கும் அடுத்த சில மணி நேரங்களில் தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சுகுமாரனையும், அவரது ஆஸி சகாவையும் பார்வையிட வந்த குடும்பத்தினர் காரணமாக நுசாகம்பங்கன் சிறைச்சாலை பகுதியில் உணர்ச்சிபூர்வமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குடும்பத்தினரை பெருமளவு மக்கள் சூழந்துகொண்டதாகவும்,பொலிஸார் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச்சென்றதாகவும் தெரியவருகின்றது.

சுகுமாரனின் சகோதரி மயங்கிவிழுந்ததாகவும் தெரியவருகின்றது.

நாங்கள் எங்கள் சகோதரனுடன் கடந்த சில மணித்தியாலங்களை செலவிட்டோம்,

எங்களுக்கு போதிய அவகாசமிருக்கவில்லை,பல விடயங்கள் குறித்து பேச வேண்டியிருந்தது,நாங்கள் மரணதண்டனை குறித்து பேசினோம், அந்த உரையாடல் பயனற்றது என்பது அவருக்கு தெரிந்திருந்தது,இதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுக்கு முடிவை காண முடியாது என்பது அவரிற்கு தெரிந்திருந்தது,இவர்கள் இன்று இறந்தாலும் அடுத்த மாதம் எதுவும் மாறப்போவதில்லை,

நான் ஜனாதிபதியை கருணை காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்,எனது சகோதரரை எனது தாயும் சகோதரியும் புதைக்க அனுமதிக்க வேண்டாம்,இந்தோனேசிய மக்கள் இரக்கம் காட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனசுகுமாரனின் சதோரர் சிந்து சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எனது சகாதரனுக்கு இதனை செய்யவேண்டாம் என சுகுமரானின் சகோதரி பிருந்தா மன்றாட்டமாக இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இதேவளை எனது மகனை நான் இனிமேல் பார்க்க மாட்டேன் அவனை இன்றிரவு சுட்டுக்கொல்லப்போகின்றனர் அவன் அழகாவும் ஏனையவர்களிடம் கருணையுடனும் காணப்படுகின்றான். நான் அரசாங்கத்தை அவனை கொல்லவேண்டாம் , தயவுசெய்து கொல்லவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் ஜனாதிபதி அவர்களே அவனை கொல்ல வேண்டாம், என சுகுமாரனின் தாயார் ராஜி மன்றாட்டமாக கேட்டுக்கொண்டுள்ளார்.