செய்திகள்

மயூரன் சுகுமாரன் குழுவினருக்கு விரைவில் மரணதண்டனை.?

போதைப்பொருள் கடத்தலுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் உட்பட ஒன்பது பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு வெளி நாட்டு தூதுவர்களை விஜயம் மேற்கொள்ளுமாறு இந்தோனேசியா அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தோனனேசியாவின் இந்த அழைப்பு அவர்களுடைய மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அந்த நாடு தயாராவதை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுசகம்பன்கன் தீவிலுள்ள சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதை இராஜதந்திரிகள் உறுதிசெய்துள்ளனர்.
எங்களை குறிப்பிட்ட சிறைச்சாலைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்,எப்போது மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்பது தெரியாது , எனினும் ஓரிரு நாட்களில் அது நிறைவேற்றப்படலாம் என இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை நிறைவேற்றப்படும் நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காகவே இராஜதந்திரிகளை இந்தோனேசியா அழைத்திருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மரணதண்டனைக்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு இந்தோனேசியாவின் சட்ட-மா- அதிபர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இந்தோனேசிய பிரஜை குறித்த வழக்கு விசாரணைகள் முடிவடைந்ததும் மரணதண்டனைக்கான திகதி தீர்மானிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள போதிலும் இந்ஆதானேசிய அரசாங்கம் அவர்களுக்கான நீதிவழிமுறைகள் முடிவிற்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சட்டத்தரணி தற்போதைய நிகழ்வுகள் குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
ஓன்பது பேரிற்காகவும் அரசியலமைப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளோம்,முடிவிற்காக காத்திருக்கின்றோம்,என அவர் தெரிவித்துள்ளார்.
மயூரன் சுகுமாரன் உட்பட இரு ஆஸி பிரஜைகளிடம் கடந்த வாரம் பேசியதாகவும் அவர்கள் நல்ல மனோநிலையில் காணப்படுவதாகவும் அவர்களது குடும்பத்தினர் இந்தோனேசியா விரைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

_82531267_9b606e70-1652-4b60-b1b1-9c4ed2e7e811
நைஜீரியா, பிரான்ஸ் பிரேசில் மற்றும் அவுஸ்திரேலியர்கள் இந்த ஓன்பது பேரில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆஸி அரசாங்கம் தனது இரு பிரஜைகளுக்காகவும் கடும் இராஜதந்திர அழுத்தங்களை கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் திருந்திவிட்டனர் அவர்களை விடுதலைசெய்யவேண்டும் என அது கேட்டுள்ளது.
இதேவேளை பிரான்ஸ் தனது பிரஜைக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் இந்தோனசியாவுடனான தனது உறவு பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளது.