செய்திகள்

மரண பூமியாகும் ஐரோப்பா – இத்தாலியில் மட்டும் ஒரேநாளில் 900இற்கும் மேல் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மனிப் பேரழிவு நிழத்தப்பட்டு வருகின்ற நிலையில் நாளுக்கு நாள் வைரஸ் தாக்கம் தீவிரமான அதிகரிப்பையே ஏற்படுத்தி வருகின்றது.இந்த வைரஸ், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் அதி தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில் உலக அளவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 3 ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் அதிக உயிரிழப்பு இத்தாலியில் நேற்றுப் பதிவாகியுள்ள நிலையில் அங்கு 919 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக 9 ஆயிரத்து 134 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமாக 86 ஆயிரத்து 498 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஸ்பெயினில் நேற்று மட்டும் 773 உயிரிழப்பு பதிவாகி மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது. அங்கு நேற்று 7 ஆயிரத்து 933 பேர் புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு மொத்தமாக 65 ஆயிரத்து 719 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.82206

அத்துடன் பிரான்ஸிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அங்கு நேற்று மட்டும் 299 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதேவேளை நெதர்லாந்தில் 112 பேரும், சுவிற்சர்லாந்தில் 39 பேரும், ஜேர்மனியில் 84 பேரும் பெல்ஜியத்தில் 69 பேரும் நேற்று ஒரேநாளில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒரேநாளில் 185 பேர் இறந்துள்ள நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 769 ஆக உயர்ந்துள்ளது.இங்கிலாந்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. உயிரிழந்த நோயாளிகள் 29 வயது முதல் 98 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)