செய்திகள்

“மரஸ்” வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுக்க விமான நிலையத்தில் விசேட பரிசோதனை

தென்கொரியாவில் துரிதமாக பரவி வரும் உயிர்கொல்லியான ‘மர்ஸ்’ வைரஸ் இலங்கைக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் விசேட முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் வைத்து முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை பிரஜைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உயிர்கொல்லியான மர்ஸ் வைரஸ் நோய் பின்னர் மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.