செய்திகள்

மருத்துவமனையில் எம்.எஸ்.விஸ்வநாதன்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது 86 ஆவது பிறந்ததினம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூச்சு விட சிரமப்படும் அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.