செய்திகள்

மருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சை

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறையில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சனைகளாலேயே அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.

அதேவேளை அவரின் தாயாரின் கோரிக்கைக்கு இணங்க அவர் வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.