செய்திகள்

மருந்து , எரிபொருள் தவிர்ந்த அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

அத்தியவசிய மருந்து பொருட்கள் மற்றும் எரிபொருள் தவிர்ந்த அத்தியாவசிய வேறு பொருட்களை இறக்குமதி செய்வதனை தடை செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையில் இலங்கை மக்களின் உணவு பாதுகாப்புக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் இதன்படி அரிசி , மரக்கறி உள்ளிட்டவற்றை எதிர்வரும் 4 மாதங்களுக்கு போதுமான அளவுக்கு இங்கு உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஸ் பத்திரன எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு அத்தியவசிய மருந்துகள் , எரிபொருள் தவிர்ந்த அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-(3)