செய்திகள்

மர வியாபாரி கொலை குற்றவாளிகள் சிறையில் அடைப்பு

கோவையில் நேற்று நடந்த மர வியாபாரி கொலை வழக்கில் தலை மறைவாக இருந்த கோவை மாநகராட்சி பாஜக உறுப்பினர் வத்சலா மற்றும் அவரது கணவர் வரதராஜன், மற்றும் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த மாநகரட்சி உறுப்பினர் வத்சலா கணபதி பேருந்து நிலையம் அருகே பேருந்தில் ஏறி தப்ப முயன்ற போது கைது செய்ததாக துடியலூர் காவல் ஆய்வாளர் சரவணன் தெரிவித்தார். மேலும் இளங்கோ,  கனகராஜ், செந்தில் குமார் உள்ளிட்ட 3 பேரை இன்று துடியலூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு கோவை குற்றவியல் நீதிமன்றம் 1 ல் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஆட்டோ குமாரை தற்போது கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வத்சலாவின் கணவர் வரதராஜனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.