செய்திகள்

மறைத்துவைக்கப்பட்டிருந்த வானூர்த்தி: ஒருவர் கைது! களஞ்சியசாலைக்கு சீல்!!

கொழும்பில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமாலை வானூர்தி  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வானுர்த்தி மறைத்துவைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையும் சீல்வைத்து மூடப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறியரக விமானமொன்று நேற்றுமாலை கண்டுபிடிக்கப்பட்டுள்மை பற்றிய தகவல்களை சமகளம் வாசகர்களுக்கு உடனடியாகவே நாம் தந்திருந்தோம்.

நாரஹென்பிடியவில் உள்ள பொருளாதார மத்திய நிலைய களஞ்சியசாலையிலேயே இந்த சிறிய ரக விமானம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இருவர் மாத்திரம் பயணிக்கக் கூடிய சிறிய ரக விமானம் ஒரு திரைப்பட இயக்குநர் ஒருவருக்குச் சொந்தமானதென விசாரணைகளின் போது தேரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.  விமானம் மீட்கப்பட்ட பின், குறித்த திரைப்பட இயக்குநர் மீட்கப்பட்டது தன்னுடைய விமானம் என ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் விமானம் மீட்கப்பட்டதை அடுத்து இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமானம் ஜனாதிபதியின் மகன்களில் ஒருவரால் இங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. இது எங்கு வாங்கப்பட்டது? எதற்காக மறைத்துவைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.