செய்திகள்

மற்றொரு நாட்டுக்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்தும் நோக்கம் இல்லை: சீன அமைச்சர்

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நோக்கமோ, வேறு நாடுகளுக்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்தும் நோக்கமோ சீனாவுக்கு இல்லை என அந்த நாட்டின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்ஜோ தெரிவித்திருக்கின்றார்.

இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள சீன அமைச்சர், கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இதனைத் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதுதான் இலங்கையில் சீனாவின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் சீன அமைச்சர் சந்தித்தார்.