செய்திகள்

மற்றொரு வழக்கிலிருந்தும் பொன்சேகா விடுதலை

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளராக இருந்த முன்னாள் கெப்டன் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து இன்று அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்றதன் பின்னர் சட்ட விரோதமாக 10 இராணுவ உறுப்பினர்களை அவர்களது பாதுகாப்பிற்காக வைத்திருந்ததாகவும், அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் செயற்பட்டதாகவும் இந்த வழக்கில் குறித்த இருவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கிலுள்ள குற்றச்சாட்டுக்கள் அரச தரப்பினால் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுவிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் தெரிவித்துள்ளார்.