செய்திகள்

மலாக்கா கடற்பரப்பின் பாதுகாப்பு பணிகள் இலங்கைக் கடற்படையினரிடம்!

மலாக்கா கடற்பரப்பின் பாதுகாப்புப் பணிகள் இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

மாலைதீவு முதல் சிங்கப்பூரின் மலாக்கா கடற்பரப்பு வரையிலான பிரதேசத்தின் வெளிநாட்டு கப்பல்களுக்கான பாதுகாப்பை வழங்கும் பணிகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக இலங்கைக் கடற்படையினர் சில கப்பல்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளனர்.

பாதுகாப்பு பணிகளுக்காக இரண்டு கப்பல்களும் 170 கடற்படை உத்தியோகத்தர்களும் அண்மையில் நான்கு நாள் பயிற்சி ஒன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினருக்கு சொந்தமான சக்தி மற்றும் சுரனிமல ஆகிய கப்பல்களும் 170 கடற்படை உத்தியோகத்தர்களும் மாலைதீவை அண்டிய பகுதிகளில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பயிற்சி பற்றிய விபரங்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் மாலைதீவு சென்றிருந்த போது அதிவேக படகுகள் பற்றியும் பயிற்சியில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சர்வதேச கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களை முறியடிக்க கடற்படையினர் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

வர்த்தக கப்பல்களுக்கு சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பு வழங்கும் ஜப்பானிய கப்பல்கள் இரண்டு அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 n10