செய்திகள்

மலேசியாவில் இரு இலங்கையர் கைது

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த நூறு வெளிநாட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரிங்கிட், மலாக்கா மத்திய பஸ் தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் 6 பெண்களும் அடங்குவதாக மலேசியாவின் தி ஸ்டார் ஒன்லைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலாக்கா பஸ் நிலையத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் திடீர் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்குச் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.

இந்த பஸ் நிலையத்தில் 550 இற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இருந்ததாகவும் அதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டடவர்கள் இனங்காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.