செய்திகள்

மலேசியாவில் நிலநடுக்கம்!

மலேசியாவின் போர்னியோ தீவில் இன்று காலை 6.0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

போர்னியோ தீவு, சபா மாவட்டத்தில் உள்ள கோடோ கினாபாலு நகரில் இருந்து 54 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான கினாபாலு மலையில் 160 பேர் சிக்கியுள்ளதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேத விபரங்கள் இதுவரை தெரிய வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.