செய்திகள்

மலையகத்தில் களை கட்டிய சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் (படங்கள்)

மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து 14.04.2015 இன்று தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடினார்கள்.

புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ இ.பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்டை மலையகபகுதிகளில் உள்ள மக்கள் கோவில்களுக்கு சென்று புதுவருடத்தை ஆரம்பித்தனா்.

இதில் அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனா்.

இதேவேளை, அண்மையில் மண்சரிவால் பெரும் பாதிப்புக்குள்ளான மீரியபெத்தை மக்கள் வாழும் பகுதிகள் எந்தவிதக் கொண்டாட்டங்களும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

DSC09689

DSC09698

DSC09707

DSC09712

DSC09714

DSC09718

DSC09725

DSC09732

DSC09733

Still0414_00002