செய்திகள்

மலையகத்தில் தோட்ட தொழிலாளிகள் மெதுவான பணிகளில்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இரண்டு வருட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ம் திகதியோடு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தொழிற்சங்கங்களுக்கிடையிலுமான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா கம்பனிகள் வழங்க வேண்டும் என கோரி கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு இணக்கம் தெரிவிக்காததையடுத்து இன்றைய தினம் தோட்ட தொழிலாளர்களை மெதுவான பணிகளில் ஈடுப்படுமாறு தொழிற்சங்கள் அறிவித்தது.

மலையக பகுதிகளில் அனைத்து தோட்டங்களிலும் தொழிற்சங்க பேதமென்று இவ்விடயத்தில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

அத்தோடு ஒவ்வொரு தொழிலாளரும் குறைந்த கிலோ கொழுந்து பறித்ததாகவும் தோட்ட நிர்வாகத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

DSC09796 DSC00007 DSC09770