மலையகத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 35 பேர் பாதிப்பு (படங்கள்)
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான தோட்டம் எமில்டன் பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15.04.2015 அன்று பிற்பகல் பெய்த கடும் மழையினால் வீடுகளின் பிற்பகுதியிலிருந்த மண்மேடு சரிந்து விழுந்து நான்கு வீடுகளில் படுக்கையறை உட்பட சமயலறையும் இவ்வாறு சேதமடைந்துள்ளது.
15.04.2015 அன்று மாலை 6.30க்கு ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் நான்கு வீடுகளில் இருந்த 35 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக தோட்ட ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இவர்களுக்கான உணவு பொருட்களை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றது.
இந்த அனர்த்தத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இவ்வனர்த்தம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையகத்தில் தற்போது பிற்பகல் வேளையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.