செய்திகள்

மலையகத்தில் மதிய நேரத்திலும் கடும் பனி மூட்டம்! வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை (படங்கள்)

மலையகப்பகுதிகளில் இன்று (13.04.2015) பிற்பகல் வேளையில் இருந்து தற்போது வரை அதிக பனிமூட்டம் காணப்படுகின்றது.

அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுகின்றது.

இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, அட்டன், கினிகத்தேன போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் மற்றும் அட்டன் நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமையால் குறித்த வீதியில் பயணம் செய்யும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது முன் விளக்கை போட்டுக்கொண்டு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

DSC09659

DSC09660

DSC09663

DSC09665

DSC09667