செய்திகள்

மலையகத்தில் மீண்டும் தோன்றும் மஹிந்தவின் கட்டவுட்டுக்கள் (படங்கள்)

மலையகத்தின் கொட்டகலை மற்றும் அட்டன் மல்லியப்பு பகுதிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருடன் முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும் இணைந்து பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட கட்டவுட்கள் போடப்பட்டிருந்தது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது அவரின் உருவ படங்கள் மாத்திரம் குறித்த கட்டவுட்களில் ரப்பர் சீட்களால் மூடப்பட்டிருந்தது.

எனினும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கட்டவுட்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த ரப்பர் சீட்கள் அனைத்தையும் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்கும் மாஜென எக்சத் பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான எலப்பிரிய நந்தராஜ் அவர் 21.05.2015 இன்று கழற்றி அப்புறப்படுத்தியுள்ளார்.

இதன்போது எலப்பிரிய நந்தராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

படைவீரர்கள் ஞாபகார்த்தப்படுத்தும் இந்த கிழமையில் இலங்கை நாட்டில் இருந்த யுத்தத்தை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்தி இன, மத பேதம் இல்லாமல் அனைத்து மக்களுடனும் ஒற்றுமையை ஏற்படுத்தி இந்த நாட்டிற்கு பல அபிவிருத்திகள் செய்து கொடுத்த முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப் படத்தை மூடி மறைப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லையெனவும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்த அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பல வரப்பிரசாதங்களை முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பெற்றுக்கொண்டிருந்தாலும் மூடி வைக்கப்பட்டிருந்த இந்த உருவ படத்ததை திறந்து வைப்பதற்கு எவருக்கும் முதுகெலும்பில்லையென தெரிவித்தார்.

மேலும்,
முன்னாள் ஜனாதிபதி இந்த நாட்டை பாதுகாப்பதற்கு மீண்டும் அரசியலிற்கு வரப்போவதை யாபாலன நடத்தும் ஜக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பயமுற்று இருப்பதாகவும் இந்த நாட்டின் பல வாக்காளர்கள் இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாகவும் வெகுவிரைவில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_1503

IMG_1504

IMG_1505

IMG_1507

IMG_1508

IMG_1509

IMG_1512

IMG_1514

IMG_1519

IMG_1521

IMG_1523

IMG_1525

IMG_1529

IMG_1534

IMG_1541

IMG_1547

IMG_1548

IMG_1552

IMG_1554

IMG_1558

IMG_1563

IMG_1566