செய்திகள்

மலையகத்தில் 3 கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்கத் தீர்மானம்

மலையகத்தில் மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

வடக்கில் தமிழ் தேசிய கூட்டைமைப்பினை போல் மலையகத்தில் இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக தெரவிக்கப்படுவதுடன் இதில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன ஒன்றிணைந்தே இந்த கூட்டணியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான அறிவிப்புகள் அந்த கூட்டணியினரால் அடுத்த வாரத்தில் வெளியடப்படவுள்ளதாhகவும் தெரிய வருகின்றது.